சிரியாவில், தீவிரவாத குழுக்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கிகள், வெடிபொருட்களை சிரியா ராணுவம் காட்சிக்கு வைத்துள்ளது. சிரியாவில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி குழுக்கள், தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் நடத்திய தாக்குதல்களின்போது துப்பாக்கிகள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வாறு கைப்பற்றப்பட்ட அதிநவீன துப்பாக்கிகள், 2 லட்சத்துக்கும் மேற்பட்ட புல்லட்டுகள், வெடிபொருட்கள், ராணுவ வாகனங்களை குறிவைத்து தாக்கும் ஆயுதங்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
சிரியாவுக்கு எதிராக செயல்படும் நாடுகளில் இருந்து கிளர்ச்சி குழுக்கள் வாங்கிய இந்த ஆயுதங்களை ராணுவத்துக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.