சினிமா டைலிஷ்ட் காஸ்ட்யூமராக வலம் வரும் கௌதம் மேனனின் தங்கை!
கௌதம் மேனன் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர். இவர் அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு, எனை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வருகிறார்.
அவரின் தங்கை உத்ரா மேனன் தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் ஸ்டைஸிஸ்ட் காஸ்ட்யூமராக இருந்து வருகிறார்.
அவர் கதைக்கு ஏற்றபடி படத்தில் நடிக்கும் ஹீரோக்களை எப்படி ஸ்டைலாக காட்டுவது அதற்கு எந்த மாதிரியான உடைகளை தயார் செய்து கொடுப்பது, காஸ்ட்யூம், மேக் அப், இண்ட்டீடியர் டெக்கரெஷன் அடங்கிய பணிகளை கவனித்து வருகிறார்.
உத்ராவின் கணவர் முத்தையா விளம்பர பட இயக்குனர். கௌதம் மேனனின் படங்களிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது, எனை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கும் பணியாற்றி வருகிறார்.
மேலும் உத்ரா அவரது அண்ணனின் படங்களை தவிர மற்ற படங்களிலும் பணியாற்றுவதில் தீவிர ஆர்வத்தில் இருக்கிறாராம்.