நேற்றிரவு நடாத்தப்பட்ட ஒரு சோதனையில், போர் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குடியிருப்புக் கட்டத்தின் வெளியே உள்ள பொருட்கள் வைக்கும் இடமான BOX ஒன்றிற்குள் இருந்து இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
வாடகைக்கு விடப்பட்டு, பல மாதங்களாக வாடகை வழங்கப்படாத நிலையில், Garenne-Colombes (Hauts-de-Seine) இல் உள்ள Avenue du Général-de-Gaulle இல் அமைந்துள்ள குடியிருப்புக் கட்டத்தின் BOX இனைத் திறந்த உரிமையாளர், அங்கு போர் ஆயுதங்கள் இருந்ததைக் கண்டுள்ளார். உடனடியாகக் காவற்துறையினரக்கு அவர் அறிவித்துள்ளார்.
அங்கு வந்த காவற்துறையினர் நேற்றிரவு 22h40 அளவில் AK47, AR15 தாக்குதல் இயந்திரத் துப்பாக்கி, Mac 11 இயந்திரக் கைத்துப்பாக்கி, மேலும் பல துப்பாக்கிகளை மீட்டுள்ளனர். இவை பெரும் தாக்குதலிற்குப் பயன்படுத்தப்படுபவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் பெருமளவான ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத் தடைப்பிரிவினர் மற்றும் காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.