Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சாய் பல்லவி சிறந்த நடிகை, சர்வானந்த் சர்டிபிகேட்

December 18, 2018
in Cinema
0

‘பிரேமம்’ படம் மூலம் புகழ் பெற்ற நடிகையானவர் சாய் பல்லவி. தெலுங்கில் “பிடா, மிடில் கிளாஸ் அப்பாயி’ ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் அவர் நடித்துள்ள ‘பதி பதி லேச்சே மனசு’ படம் வரும் 21ம் தேதி வெளியாக உள்ளது. அந்தப் படத்தில் சர்வானந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். சர்வானந்த் தமிழில், “எங்கேயும் எப்போதும், ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ ஆகிய படங்களில் நடித்தவர்.

சாய் பல்லவி இரண்டு படங்களில் தெலுங்கில் நடித்தாலும் அவரைப் பற்றிய ஒரு சர்ச்சை எப்போதும் அங்கு வலம் வந்து கொண்டிருந்தது. தமிழில் வெளிவந்த ‘தியா’ படத்தில் சாய் பல்லவியுடன் தெலுங்கு நடிகரான நாக சௌரியா நடித்தார். அவர் சாய் பல்லவியைப் பற்றி குற்றம் சாட்டும் வகையில் ஏற்கெனவே பேசியிருந்தார். தெலுங்குத் திரையுலகத்தில், படப்பிடிப்புக்கு சரியாக வர மாட்டார், சரியான அணுகுமுறை இல்லாதவர் என்ற குற்றச்சாட்டு சாய் பல்லவி மீது உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் மறுத்து சாய் பல்லவிக்கு நல்ல சர்டிபிகேட் தருகிறார் சர்வானந்த்.

”சாய்பல்லவி மிகவும் தோழமையான ஒரு நடிகை. எங்களது படத்தில் அவர் 60, 70 நாட்கள்தான் நடிக்க வேண்டியது. ஆனால், படப்பிடிப்பு 130 நாட்கள் சென்றது. அதற்கெல்லாம் அவர் எந்த வருத்தமும் கொள்ளவில்லை. எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு தந்து நடித்துக் கொடுத்தார். அவர் மிகவும் திறமையான நடிகை. அதனால் மற்ற நடிகர்களும் போட்டி போட்டு நடிக்க வேண்டி இருந்தது,” என்று கூறியிருக்கிறார்.

டிசம்பர் 21ம் தேதி சாய் பல்லவி நடித்து தமிழில் ‘மாரி 2’ படமும், தெலுங்கில் ‘பதி பதி லேச்சே மனசு’ படமும் வெளியாக உள்ளது.

Previous Post

அம்பானி வீட்டு திருமணத்தில் திரைநட்சத்திரங்கள் உணவு பரிமாறியது ஏன்.?

Next Post

மஹா’ போஸ்டருக்கு தெலுங்கானா எம்எல்ஏ கடும் கண்டனம்

Next Post

மஹா' போஸ்டருக்கு தெலுங்கானா எம்எல்ஏ கடும் கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures