Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சர்வதேச விமானங்களுக்கு இலங்கை வழங்கவுள்ள சலுகை

December 22, 2020
in News, Politics, World
0

சர்வதேச விமானக் கம்பனிகளிடமிருந்து அறிவிடப்படும் தரையிறக்கல் மற்றும் தரித்து வைத்தல் கட்டணங்களை அறவிடாமல் இருக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்களைத் திறப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன் முன்னோடிக் கருத்திட்டமாக 2020 திசம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரை சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளைப் பின்பற்றி வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையங்களைத் திறப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதற்கமைய, சுற்றுலாத்துறை அமைச்சும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபையும் இணைந்து தயாரித்த விசேட நேர அட்டவணைகளுக்கமைய, சர்வதேச விமானக் கம்பனிகள் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. தற்போது சர்வதேச விமானக் கம்பனிகள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகளின் மத்தியில் சர்வதேச விமானக் கம்பனிகள் எமது நாட்டுக்கு மேற்கொள்ளும் விமானப் பயண நடவடிக்கைகளுக்கு வலுச் சேர்க்கும் வகையில் விமானக் கம்பனிகளிடமிருந்து அறிவிடப்படும் தரையிறக்கல் மற்றும் தரித்து வைத்தல் கட்டணங்களை 2020 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் விடுவிப்பதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Previous Post

வீதி விபத்துகளைக் குறைக்க புதிய திட்டம்

Next Post

கொரோனாவை கட்டுப்படுத்த மேல் மாகாணத்தை முடக்குங்கள்

Next Post

கொரோனாவை கட்டுப்படுத்த மேல் மாகாணத்தை முடக்குங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures