Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சம்மாந்துறை பிரதேசத்தில் கொரோனா விழிப்புணர்வு

October 18, 2020
in News, Politics, World
0

சம்மாந்துறை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலகம், பிரதேச சபை, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பொறுவோம் எனும் தொனிப்பொருளில் நேற்றுமுன்தினம் (17) சம்மாந்துறை நகர் பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது தொடர்பான வழிமுறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், பதாதைகளும் ஒட்டப்பட்டன.

சம்மாந்துறை வர்த்தகச் சங்கத்தின் தலைவர் எஸ்.எல்.சுலைமாலெவ்வை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.கபீர், பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா, பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நெளஷாத், காவல் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.ஜயலத், பிரதான நம்பிக்கையாளர் சபைத் தலைவர் மௌலவி எம்.மஹ்ருப், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது பொதுப்போக்குவரத்தில் ஈடுபடுகின்ற வாகனங்கள், பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள், பாடசாலைகள், அரச நிறுவனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டதுடன், நகர் பகுதி மற்றும் பொதுச்சந்தை பகுதிகளுக்கு வரும் மக்களுக்கு துண்டுப்பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

Previous Post

இன்று ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் முக்கிய கூட்டம்

Next Post

கட்டாரில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

Next Post

கட்டாரில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures