தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசனுக்கு நேற்று -17- பிறந்தநாள்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காலையிலேயே வாழ்த்துக் கூறி அரசியல் மற்றும் தேர்தல் பணிகள் குறித்தும் விசாரித்தாராம்…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் தொலைபேசியில் தொடர்புகொண்டு அமைச்சர் மனோவை வாழ்த்தினாராம்…
தேர்தல் பணிகளில் பிசியாக இருந்த மனோவை தொலைபேசியில் தொடர்புகொள்ள மஹிந்த ராஜபக்ஷ பல தடவைகள் முயற்சித்தும் முடியாமல் இருந்ததாம்…
பின்னர் கதிர்காமத்தில் விசேட பூஜை வழிபாடுகளுக்குச் சென்ற மஹிந்த அங்கிருந்தே தொடர்புகொண்டு வாழ்த்தினாராம்…
“சரியோ பிழையோ மனோ எதையும் துணிச்சலாகச் சொல்லும் ஒருவர். யாருக்காகவும் தனது அரசியல் கொள்கையை மாற்றியதில்லை. ஒவ்வொரு வருடமும் அவரை நான் வாழ்த்துவது வழக்கம். இம்முறையும் அதை மிஸ் பண்ண விரும்பவில்லை. சம்பந்தனுக்கு அடுத்தபடியாக மனோ மீது நான் மரியாதை வைத்துள்ளேன்.
அதுதான் வாழ்த்தினேன்” என்று கதிர்காமத்தில் தனது அருகில் இருந்த அரசியல் முக்கியஸ்தர்களிடம் தெரிவித்தாராம் மஹிந்த.