சமந்தாவும், நாக சைதன்யாவும் பிரிவதாக அறிவித்துள்ள நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர். இது தென்னிந்திய திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் தான் என்று கூறப்பட்டு வந்தது. சமீபத்தில் இதுகுறித்து விளக்கமளித்த பிரீதம் ஜுகல்கர், சமந்தாவை தான் சகோதரியாக பார்ப்பதாகவும், தங்களுக்கு இடையே தவறான உறவு இல்லை என்றும் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

#No 1 TamilWebSite
