காலி-மீட்டியாகொட பிரதேசத்தில் அண்மையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவருக்கு ஆயுதங்களைப் பெற்றுக்கொடுத்த காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உத்தியோகத்தர் அக்கரப்பத்தனை காவல் நிலையத்துடன் இணைக்கப்பட்ட காலத்தில் இவ்வாயுதங்களை வழங்கியுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பிரத்தியேக வகுப்பு ஆசிரியர் ஒருவரும் காவல் துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தொிவித்துள்ளார்.

