இன்றைய நாடாளுமன்றத்தில் மூன்று புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சாந்த பண்டார, டீ.பீ.ஹேரத் மற்றும் மனோஜ் சிறிசேன ஆகியோரே இன்றைய நாடாளுமன்றத்தில் சத்திய பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிலையில் , சந்தரசிறி கஜதீரவின் மறைவையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டுள்ளார்.