Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோரிக்கை நிராகரிப்பு | கோபமடைந்தார் உக்ரைன் ஜனாதிபதி

March 5, 2022
in News, World
0
கீவ் நகரத்தை விட்டு வெளியேற மாட்டேன் | உக்ரைன் அதிபர் உறுதி

தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து வருகிறது, ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன.

The city of Kharkiv, pictured, has been devastated by the Russian invasion. The city, to the east of Ukraine, has been under near constant bombardment

இருதரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இதற்கிடையே, தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.

உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்கத் தடை என நேட்டோ அறிவித்தால் பயணிகள் விமானம், சரக்கு விமானம், போர் விமானம் என எவ்வித விமானங்களும் உக்ரைன் வான்பரப்பில் பறக்கக் கூடாது.

இது ரஷ்ய போர் விமானங்கள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க உதவும்.

தடையை மீறும் எந்த விமானங்களையும் நேட்டோ படைகள் சுட்டுவீழ்த்தலாம். ஆனால், உக்ரைன் ஜனாதிபதி விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்துள்ளது.

NATO calls on Taliban to reduce violence, seek peace: statement | Reuters

இந்நிலையில், தாங்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து உக்ரைன் ஜனாதிபதி விளோடிமர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “நேட்டோ கூட்டமைப்பு பலவீனமான மற்றும் குழப்பமானது.

“இன்று முதல் இறக்கும் மக்கள் அனைவரும் உங்களால் இறந்துவிடுவார்கள். உங்கள் பலவீனம் மற்றும் தொடர்பின்மை காரணமாக இது நடக்கப்போகிறது.

உக்ரைன் நகரம் மீதும் கிராமங்கள் மீது மேலும் தாக்குதல் நடத்துவதற்கான பச்சைக்கொடியை நேட்டா தலைமை வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

மின்வெட்டு தொடர்பில் புதிய அறிவித்தல் வெளியானது

Next Post

சரத்குமார் நடிக்கும் ‘பரம்பொருள்’

Next Post
சரத்குமார் நடிக்கும் ‘பரம்பொருள்’

சரத்குமார் நடிக்கும் 'பரம்பொருள்'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures