தன் மீதான குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்குமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபயா ராஜபக்ஷ மேல்நீதிமன்றத்தில் கேட்டிருந்த வேண்டுகோள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு ஆணையாளரால் தனக்கு எதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கு சட்டரீதியற்றது எனவும் தன்னை குறித்த குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்குமாறும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
எவன்கார்ட் நிறுவனத்துக்கு சட்டவிரோதமான முறையில் ஆயுத களஞ்சியம் ஒன்றை நடாத்திச் செல்ல அனுமதி வழங்கியதன் மூலம் அரசுக்கு 1140 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 19 குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.