Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பு மாநகர சபை பிரதேசத்தை 3 வார காலத்திற்கு மூட வேண்டும்

November 17, 2020
in News, Politics, World
0

நாட்டில் தற்பொழுது உள்ள நிலையில் குறைந்த பட்சம் மூன்று வார காலத்திற்காவது கொழும்பு மாநகர சபை அதிகார பிரதேசத்தை மூட வேண்டும் என கொழும்பு மாநகர மேயர் ரோஷி சேனாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு நகர சபை அதிகார பிரதேசத்தில் கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவற்காக தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

´கொவிட்டுடன் வாழ்வது என்பது கொவிட் இரண்டாம் அலையுடன் வாழ்வதென்று பொருட்படாது. கொவிட்டுடன் வாழ வேண்டும் என்றால் இரண்டாவது அலையை கட்டாயம் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

கடுமையான பயணக்கட்டுப்பாடுகளை விதித்து நகரத்தை கடும் நிர்வாகத்திற்கு கீழ் கொண்டுவந்து எவருக்கும் நகரத்தினுள் பிரவேசிப்பதற்கும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து எவரும் வௌியேராத வகையில் கடும் நிர்வாகத்தின் கீழ் இதனை கட்டுப்படுத்த வில்லை என்றால் ஒரு பெரிய பேரழிவுக்கு முகங்கொடுக்க நேரிடும்.

நேற்று மட்டக்குளி பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் சிலர் வீடுகளில் இருந்து வௌியேறி தொழில் செய்யும் இடங்களுக்கு செல்வதை அவதானிக்கக்கூடியதாய் இருந்தது.

மரணங்களின் சதவீதம் நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர குறைவடைவதில்லை. கொழும்பு நகர சபை எல்லைக்குள் வசிக்கும் வயோதிபர்களின் எண்ணிக்கை அதிகம். அவர்களை காப்பாற்ற முடியுமா என்பதும் இன்று ஒரு பிரச்சினையாகியுள்ளது.

வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு எவ்வளவு கூறினாலும், குடிசைவாசிகளுக்கு அவ்வாறு செய்வது அவசியமற்றது. அவ்வாறு செய்வதாயின் இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கம் கடுமையான நிர்வாகத்தின் கீழ் செயற்பட வேண்டும். 14 அல்லது 21 நாட்கள் முடக்கி இதனை கட்டுப்படுத்தவில்லை என்றால் ஆபத்தான சூழலை எதிர்க்கொள்ள வேண்டியேற்படும்´ என்றார்.

Previous Post

அனுஷா தலைமையில் மலையகத்தில் புதிய கட்சி

Next Post

இன்று 88 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

Next Post

இன்று 88 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures