எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில், தானும் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வேண்டுமென்ற விருப்பத்தை, மூத்த அரசியல்வாதி பௌசி வெளிப்படுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அல்லது அதன் கூட்டணி சார்பிலான முன்னணியில், போட்டியிடும் ஆர்வத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் ரணில் விக்கிரமசிங்க சஜித் பிரேமதாஸவுக்கும் அறியப்படுத்தியுள்ளார். தனது நிலைப்பாட்டில் அவர் உறுதியாக நிற்பதாகவும் அறிய வருகிறது.
எனினும் ஐதேக மற்றும் ஐதேமு உயர் வட்டாரங்கள் பௌசியை தேர்தலில் நிறுத்தாது, அவருக்கு தேசியப் பட்டியல் பதவி வழங்க விருப்பத்துடன் உள்ளதாகவும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.