Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் | போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை | சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

February 14, 2022
in News, Sri Lanka News
0
கொழும்பில்  பாரிய ஆர்ப்பாட்டம் | போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை | சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் சுகாதார தரப்பினரால் வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு நேற்றுடன் ஒருவாரம் நிறைவடைந்துள்ள நிலையில் , தமது சகல கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் தொழிற்சங்கங்கள் ஸ்திரமாகவுள்ளன.

சம்பள முரண்பாட்டுக்கான தீர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து தாதியர் சங்கம் , நிறைவுகாண் மருத்துவ சங்கம், மேலதிக மருத்துவ சேவைகள் சங்கம் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் கடந்த 7 ஆம் திகதி வேலை நிறுத்த போராட்டத்தினை ஆரம்பித்தன.

எவ்வாறிருப்பினும் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பில் வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவிற்கமைய அரச தாதியர் சங்கம் போராட்டத்திலிருந்து விலகியுள்ள போதிலும் , அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வைத்திய சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில் ஏனைய 17 தொழிற்சங்கங்களும் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

இதன் காரணமாக இன்றும் வைத்தியசாலைகளில் மருந்து விநியோகம் , இரசாயன ஆய்வு கூட செய்பாடுகள் மற்றும் கதிரியக்க பரிசோதனைகள் (ஸ்கேன்) உள்ளிட்ட சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. வைத்தியசாலை சேவைகள் மாத்திரமின்றி பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்த கொவிட் தடுப்பூசி வழங்கும் பணிகளும் முடங்கியுள்ளன.

அரச வைத்தியசாலைகளில் வேலைநிறுத்த போராட்டத்தின் காரணமாக மருந்து விநியோகம் முற்றாக முடங்கியுள்ளமையால் நாடளாவிய ரீதியிலுள்ள அரச ஒசுசல வளாகங்களில் மருந்துகளைப் பெற்றுக் கொள்வதற்காக நோயாளர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருப்பதை நேற்றும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

சுகாதார அமைச்சு

வேலை நிறுத்த போராட்டம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கருத்து வெளியிடுகையில் ,

‘வேலை நிறுத்த போராட்டம் விரைவில் நிறைவுக்கு வரும் என்று எதிர்பார்க்கின்றோம். சுகாதார அமைச்சர் என்ற ரீதியில் செய்யக் கூடிய விடயங்களை செய்ய முடியும் என்று கூறுவதைப் போன்றே , முடியாதவற்றை முடியாது என்றும் கூறுவேன்.’ என்றார்.

சுகாதார நிபுணர்களின் மாநாடு

சுகாதார அமைச்சரின் கருத்து தொடர்பில் சுகாதார நிபுணர்களின் மாநாட்டின் தலைவர் வைத்தியர் ரவி குமுதேஷ் தெரிவிக்கையில் , ‘மூன்றரை மாதங்களாக பேச்சுவார்த்தைக்கு கோரிக்கை விடுத்த போது அதற்கான சந்தர்ப்பத்தை வழங்காமல் , தொடர் வேலை நிறுத்த போராட்டத்தினை அறிவித்த பின்னரே பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் மறுபுறத்தில் போராட்டத்தினை முடக்குவதற்காக நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதோடு , அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. போராட்டத்தை முடக்குவதற்கு முயற்சிக்காமல் பேச்சுவார்த்தை ஊடாக தீர்வினை வழங்குமாறு வலியுறுத்துகின்றோம்.’ என்றார்.

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

இந்நிலையில் இன்று திங்கட்கிழமை கொழும்பில் சுகாதார தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்றனர்.

இதில் சுமார் 500 க்கும் மேற்பட்ட சுகாதார உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

நாட்டில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவியுள்ளது

Next Post

பினுர பெர்னாண்டோவுக்கு கொரோனா

Next Post
பினுர பெர்னாண்டோவுக்கு கொரோனா

பினுர பெர்னாண்டோவுக்கு கொரோனா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures