கடற்படை சீருடை திருடுவதற்கும், மனித படுகொலைகளுக்கும், தவறு செய்வதற்குமான அனுமதியல்லவெனவும், யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு வீரராக இருந்தாலும் தவறு செய்தால், மன்னிப்பு கிடையாது எனவும் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ட்ரவிஸ் சின்னய்யா தெரிவித்துள்ளார்.
படைவீரர் ஒருவர் கொலைகாரனாக முடியாது, கொலைகாரன் படைவீரனாக முடியாது. கடற்படையில் எந்தவொரு கடற்படை வீரராவது தவறு செய்திருப்பது தெரியவந்தால், அவருக்கு மன்னிப்பு கிடையாது.
நேற்று அவர் கடற்படைத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் முதன்முதலில் நடாத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் கூறியுள்ளார்.

