Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா வைரஸ்: வடக்கின் நிலைமைகள் கவலையாகவுள்ளது

January 15, 2021
in News, Politics, World
0

வடக்கு மாகாணத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் அடையாளம் காணப்படுவதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “மன்னாரில் கடந்த சில நாட்களில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்த 4 பேர், நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று இடம்பெற்ற பி.சி.ஆர்.பரிசோதனையில் 9 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவைச் சேர்ந்த 2பெண்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பணியாற்றும் கடையைச் சேர்ந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அடையாளம் காணப்பட்டது.

அதனால் குறித்த பெண்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் மாதிரிகள் பெறப்பட்டு,  நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தியபோது கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வவுனியா- செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உள்ளமை நேற்று கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்  நேற்று 6 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

ரஞ்சன் ராமநாயக்கவின் பிரஜாவுரிமை இரத்து

Next Post

தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் 235 யுவதிகள்!

Next Post

தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் 235 யுவதிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures