Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனா மரணங்கள்- மொத்த உயிரிழப்புகள் 129ஆக அதிகரிப்பு

December 4, 2020
in News, Politics, World
0

இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதன்படி, கொலன்னவாவை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவர் கடந்த 28ஆம் திகதி கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார்.

இவரது மரணத்திற்கான காரணம் மாரடைப்பு, நீரிழிவு நோயுடன் கொரோனா தொற்று ஏற்பட்டமை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 89 வயதுடைய ஆணொருவர் நேற்று கொழும்பு பொது மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவரது இறப்புக்கான காரணம், கொரோனா வைரஸ் தொற்றுடன் மூளைக்குள் இரத்தப் போக்கு, உயர் இரத்த அழுத்தம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு-10 பகுதியைச் சேர்ந்த 85 வயது ஆணொருவர் கடந்த 30ஆம் திகதி கொழும்பு பொது மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இவரது இறப்புக்கான காரணம் பக்டீரியா தொற்றுடன் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டமையாகும்.

அத்துடன், கொழும்பு-10 பகுதியைச் சேர்ந்த 71 வயது ஆணொருவர் நேற்று அவரது குடியிருப்பில் உயிரிழந்தார். இவரது, இறப்புக்கான காரணம் கொரோனா தொற்றுடன் மாரடைப்பு ஏற்பட்டமையாகும்.

மேலும், கொழும்பைச் சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவர் கொழும்பு பொது மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்தபோது இன்று உயிரிழந்தார்.

இவரது இறப்புக்கான காரணம் கொரோனா தொற்று நிமோனியாவுடன் சுவாசக் குழாய் செயலிழப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 129ஆக அதிகரித்துள்ளது.

Previous Post

கிழக்கு மாகாணத்தில் கொரோனா எண்ணிக்கை 300ஐக் கடந்தது

Next Post

கோபமடைந்து கொரோனா பரப்பிய நபர்; வட்டரெக்க சிறைச்சாலையில் சம்பவம்

Next Post

கோபமடைந்து கொரோனா பரப்பிய நபர்; வட்டரெக்க சிறைச்சாலையில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures