Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொரோனாவால் மயங்கிய குழந்தைக்கு வாயால் செயற்கை சுவாசமளித்த காப்பாற்றிய தாதி

September 4, 2021
in News, இந்தியா
0
கொரோனாவால் மயங்கிய குழந்தைக்கு வாயால் செயற்கை சுவாசமளித்த காப்பாற்றிய தாதி

கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று வயதுக் குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து செயற்கைச் சுவாசம் வழங்கிய தமிழ்நாட்டைச் சேர்ந்த தாதியொருவரின் செயற்பாடு வைரலாகி வருகின்றது.

தமிழகம் திருச்சூர் மாவட்டம் புதுக்காடு பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜா நன்மணிக்கரா பஞ்சாயத்து பகுதியில் உள்ள குடும்பநல மையத்தில் தாதியாக பணியாற்றி வருகிறார்.

சம்பவத்தன்று அவர் விடுமுறையில் வீட்டில் இருந்தார். காலை நேரத்தில் இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்த 3 வயது குழந்தையை அவரது வீட்டுக்கு அவசர அவசரமாக எடுத்து வந்தார்.

குழந்தை இறந்து விட்டதாக கருதிய குழந்தையின் தாய் கதறி அழுதார். குழந்தையை கையில் வாங்கிய தாதி ஸ்ரீஜா, கொரோனா தொற்று பாதிப்பால் தொடர் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கிய நிலையில் இருப்பதை புரிந்து கொண்டார்.

செயற்கை சுவாசம் அளிக்காவிட்டால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சுதாரித்துக் கொண்டு உடனடியாக செயலில் இறங்கினார். அக்குழந்தையின் வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து முதல் உதவி செய்தார்.

இப்படி பலமுறை செய்ததால் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மெதுவாக கண் திறந்து பார்த்தது. பின்னர் குழந்தையை அதன் பெற்றோர் மற்றும் தன் கணவர் பிரமோத் ஆகியோருடன் அவசர சிகிச்சை அளிக்க அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். அங்கு குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்தவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சரியான நேரத்தில் செயற்கை சுவாசம் அளித்ததால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடிந்ததாக கூறிய மருத்துவர்கள் தாதிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளித்து காப்பாற்றிய தாதி ஸ்ரீஜா கூறியதாவது:-

தாயின் தோளில் குழந்தை மயங்கிய நிலையில் இருந்த போதே அதன் நிலையை புரிந்து கொண்டேன். கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படும் தொடர் வாந்தியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டு குழந்தை மயக்க நிலையில் இருந்தது. சற்று தாமதித்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.

எனவே, எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று கருதி முதல் உதவி சிகிச்சையாக செயற்கை சுவாசம் அளித்தேன். அது மிகவும் பயனளித்தது. குழந்தையின் உயிர்தான் முக்கியம். எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் என்று கவலைப்படவில்லை. – என்றார். அந்த தாதி ஸ்ரீஜா தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இவரின் துணிச்சலான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

http://Facebook page / easy 24 news

Previous Post

நார்ச்சத்து நிறைந்த சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாலட்

Next Post

தனுஷுக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை?

Next Post
இப்படி ஒரு படத்தை பார்த்து சிரிச்சு ரொம்ப நாளாச்சு!!

தனுஷுக்கு ஜோடியாகும் பிகில் பட நடிகை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures