மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை காலை உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு கொத்தியவளை பகுதியில் வசிக்கும் 63 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் அ.லதாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை 38 ஆம் விடுதி பகுதியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

