Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூண்டோடு விசாரணை வலயத்துக்குள் ; வடக்கு கல்வி அதிகாரிகள்

November 7, 2020
in News, Politics, World
0

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாணப் பணிப்பாளர், கணக்காளர், வலயப் பணிப்பாளர் என 12 பேர் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை வலயத்தில் உள்ளனர்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் பணியாற்றிய முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் 21 மில்லியன் ரூபா மோசடியில் ஈடுபட்டமை வெளித் தெரிய வந்ததையடுத்து நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. அதேநேரம் மாகாணப் பிரதம செயலாளர் ஐவர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றையும் நியமித்தார்.

இதையடுத்து மாகாண ரீதியில் விசாரணை இடம்பெறும் அதே நேரம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மாகாணக்  கல்வி அமைச்சின் செயலாளர், பணிப்பாளர், கணக்காளர் ஆகியோருடன் வலயத்தின் கல்விப் பணிப்பாளர், கணக்காளர் என கணக்குக்குப் பொறுப்பான உத்தியோகத்தர்கள் என மொத்தம் 12 பேர் அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவ்வாறு இடம் பெற்ற விசாரணைகள் நேற்று முழுநாளும் இடம்பெற்றது.

நேற்று இடம்பெற்ற விசாரணைகள் நிறைவு பெறாத நிலையில் இன்றும் விசாரணை முன்னெடுப்பதற்காக அனைவரும் கொழும்பிலேயே மறிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய விசாரணைகளின் பின்பே இதன் இறுதி நிலைவரங்கள் தெரிய வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous Post

யாழ். கச்சேரிக் கூட்டத்தில் பங்கேற்ற கோப்பாய் பிரதேச செயலர், தவிசாளரை உடனடியாகத் தனிமைப்படுத்தப் பணிப்பு!

Next Post

23 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு!

Next Post

23 வயதுடைய இளைஞன் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures