கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் இன்று (30) இடம்பெறவுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பு இல்லத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், அரசாங்கத்திலிருந்து வெளியேறிய 16 பேருடன் தனிப்பட்ட முறையில் மஹிந்த ராஜபக்ஷ நடாத்திய சந்திப்பின் போது பேசிய விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.