உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பி.ஆர்.டி. மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஏராளமான குழந்தைகள் இறந்தன. காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) அந்த மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு அவர் சமீபத்தில் இறந்த குழந்தைகளின் குடும்பத்தினரை சந்தித்து பேசுகிறார். மாநில முதல்–மந்திரி யோகி ஆதித்யநாத்தும் இன்று கோரக்பூர் செல்கிறார். அந்த நகரில் நடைபெறும் சுகாதார இயக்க நிகழ்ச்சியில் அவர் கலந்துகொள்கிறார்.
இதற்கிடையே அலகாபாத் மற்றும் லக்னோ ஐகோர்ட்டுகளில், இந்த பிரச்சினைக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டன. இதில் மாநில அரசு மற்றும் சுகாதாரத்துறை உரிய விளக்கம் அளிக்கவும், மூளை அழற்சி நோயை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பதில் அளிக்கும்படியும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.
