Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குறைக்கப்படவுள்ள 450 கைதிகளின் தண்டனைகள்

December 31, 2020
in News, Politics, World
0

சிறைக்கைதிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனைகளை குறைக்கும் திட்டத்தின் கீழ், சுமார் 450 கைதிகளின் தண்டனைகள் குறைக்கப்படவுள்ளன.

இதனையடுத்து, தண்டனைகளைக் குறைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்ட கைதிகளின் பெயர்ப்பட்டியல், ஜனாதிபதியின் அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் கைதிகள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
இதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றதுடன், உடனடியாகக் கைதிகளுக்கான தண்டனைகள் குறைக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படவுள்ளது.

மேலும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு அந்த தண்டனை 20 வருடங்கள் வரை குறைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர், கைதிகளுக்கான தண்டனை குறைக்கும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டபோதிலும் 22 வருடங்களுக்கு முன்னர் அது கைவிடப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு உத்தரவு

Next Post

வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் நேற்று போராட்டங்கள்

Next Post

வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் நேற்று போராட்டங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures