குட்டி இளவரசர் ஜோர்ஜின் 3வது பிறந்த தினத்தன்று இளவரசர் வில்லியம் கேற் வெளியிட்ட படங்கள்.
இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேற் தங்கள் மகனின் புதிய படங்களை வெளியிட்டுள்ளனர். இளவரசர் ஜோர்ஜின் 3வது பிறந்த தினம் யூலை 22.
பகிர்ந்தளிக்கப்பட்ட படங்கள் அரியணை வரிசையில் மூன்றாவதாக இருக்கும் இந்த குட்டி இளவரசர் ஊஞ்சலில் ஆடுதல், குடும்ப செல்லப்பிராணியான லுப்போ என்ற பெயருடைய நாயுடன் அமர்ந்திருத்தல் ஆகிய படங்கள் உள்ளன.
புதிய நான்கு படங்களும் இம்மாதம் குடும்பத்தினரின் நகர வீட்டில் எடுக்கப்பட்டது.
ஜோர்ஜ் அவரது தாத்தா இளவரசர் சார்ள்ஸ் மற்றும் தந்தை வில்லியம் ஆகியவர்களை தொடர்ந்து அடுத்த வரிசையில் நிற்பவர்.
இளவரசர் ஜோர்ஜிற்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்து செயதிகளை அனுப்பிய அனைவருக்கும் பிரபுவும் சீமாட்டியும் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
– See more at: http://www.canadamirror.com/canada/66431.html#sthash.n1wuQMmP.dpuf