பிரான்ஸ் -காவல்துறை அதிகாரி ஒருவர், காவல்நிலையத்தில் வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகலுக்கு பின்னதாக Alençon, (Orne) இல் உள்ள காவல்நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு குழந்தைகளுக்கு தந்தை ஆன, குறித்த 42 வயதுடைய அதிகாரி, நேற்று, நண்பகல் வேளையில், காவல்நிலையத்தின் ஓய்வு அறைக்குள் சென்று கதவை தாழிட்டு, தன்னைத் தானே சுட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே அதிகாரி உயிரிழந்தார். இந்த தற்கொலை தொடர்பான விசாரணைகளை அப்பகுதி அரச வழக்கறிஞர் அலுவலகம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது. தற்கொலை குடும்ப பிராசனை காரணமாக இடம்பெற்றுள்ளதா, பணி தொடர்பாக இடம்பெற்றுள்ள என விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து 46 காவல்துறை அதிகாரிகளும், 16 ஜோந்தாமினர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.