தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மாபெரும் பேரணியில் வன்முறை வெடித்த சம்பவத்தில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நடிகர் ரஜினி நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வீடியோ வடிவில் ரஜினி மீண்டும் ஒரு கண்டனத்தை பதிவிட்டிருக்கிறார்.
அதில், “ஸ்டெர்லைட் போராட்டத்தில் அரசின் அலட்சியம், உளவுத்துறை உட்பட மொத்த நிர்வாகத்தின் தோல்வி, காவல்துறையினரின் வரம்புமீறின சட்டத்திற்கு புறம்பான மிருகத்தனமான செயலை வன்மையாக கண்டிக்கிறேன். உறவுகளை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என கூறியுள்ளார்.













