ஸ்காட்லாந்தில் குள்ளக் குதிரை ஒன்று கால்பந்து விளையாட்டை மிகவும் உற்சாகமாக விளையாடி வருகிறது.
ஷெட்லாண்ட் என்ற இடத்தைச் சேர்ந்த லைனே ஹாமில்டன் என்பவர் போனி எனப்படும் குள்ள ரகக் குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார். பந்து விளையாடுவதில் ஆர்வம் கொண்ட இந்தக் குதிரைக்கு அதன் உருவத்தின் அளவிற்கு காற்றால் நிரப்பப்பட்ட பந்தினைத் தயார் செய்து அதன் இருப்பிடத்திற்குள் வைத்தார். பிரமாண்ட பந்தைப் பார்த்த அந்தக் குதிரை அதன் மேல் உருண்டு புரண்டு விழுந்து தனது ஆசையை வெளிக்காட்டியது.
அதனைத் தொடர்ந்து ஹாமில்டன் பந்தை உதைத்துத் தள்ள, பதிலுக்கு அந்தக் குதிரையும் தலையால் பந்தை முட்டி உற்சாகமாக விளையாடி வருகிறது.