Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Sports

கார்த்திக் 52, ரஸ்ஸல் 49 ரன் விளாசல்: ராஜஸ்தானை வீழ்த்தியது கொல்கத்தா

May 24, 2018
in Sports
0

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான ஐபிஎல் டி20 தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில், ெகால்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 25 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ெகால்கத்தா நைட் ரைடர்ஸ் அணி குவாலிபயர்-2ல் விளையாட தகுதி பெற்றது.ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் முதலில் பந்துவீசியது. இரு அணியிலும் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கொல்கத்தா தொடக்க வீரர்களாக சுனில் நரைன், கிறிஸ் லின் களமிறங்கினர். நரைன் 4 ரன் மட்டுமே எடுத்து கவுதம் சுழலில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து வந்த உத்தப்பா, ராணா இருவரும் தலா 3 ரன் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பி ஏமாற்றமளித்தனர்.ஓரளவு தாக்குப்பிடித்த கிறிஸ் லின் 18 ரன் எடுத்து கோபால் பந்துவீச்சில் அவரிடமே பிடிபட, நைட் ரைடர்ஸ் 8 ஓவரில் 51 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.இந்த நிலையில், கேப்டன் தினேஷ் கார்த்திக் – ஷுப்மான் கில் ஜோடி 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 55 ரன் சேர்த்தது. கில் 28 ரன் (17 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஆர்ச்சர் வேகத்தில் கிளாசன் வசம் பிடிபட்டார். சிறப்பாக விளையாடிய கார்த்திக் 35 பந்தில் அரை சதம் அடித்தார். அவர் 52 ரன் எடுத்து (38 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) லாப்ளின் பந்துவீச்சில் ரகானே வசம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்ட ஓவர்களில் ஆந்த்ரே ரஸ்ஸல் சிக்சர்களை பறக்கவிட, நைட் ரைடர்ஸ் ஸ்கோர் எகிறியது. சியர்ல்ஸ் 2 ரன்னில் வெளியேறினார். நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 169 ரன் குவித்தது. ரஸ்ஸல் 49 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்), பியுஷ் சாவ்லா (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர். ராயல்ஸ் பந்துவீச்சில் கவுதம், ஆர்ச்சர், லாப்ளின் தலா 2, கோபால் 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 170 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமிறங்கியது. ரகானே, திரிபாதி ஜோடி களம் இறங்கினர். நன்றாக விளையாடி இந்த ஜோடி 47 ரன் சேர்த்திருந்த போது, திரிபாதி 20 ரன்னில் சாவ்லா பந்தில் அவுட்டானார். அடுத்து களமிறங்கிய சாம்சன் அபாரமாக விளையாடினார். ரகானே 46 ரன் எடுத்திருந்த போது குல்தீப் யாதவ் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.ஒருபுறம் அரைசதம் அடித்த சாம்சன், சாவ்லா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்களால் அணியின் வெற்றிக்கு தேவையான ரன் குவிக்க முடியாமல் திணற, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 144 ரன் எடுத்து 25 ரன்னில் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி வெளியேறியது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி, இதே மைதானத்தில் நாளை நடைபெறும் குவாலிபயர்-2 ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடன் மோதுகிறது.

Previous Post

ஓய்வு பெற்றார் டிவிலியர்ஸ்

Next Post

ராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாவது குவாலிபையருக்கு முன்னேறிய கொல்கத்தா!

Next Post

ராஜஸ்தானை வீழ்த்தி இரண்டாவது குவாலிபையருக்கு முன்னேறிய கொல்கத்தா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
நாட்டின் பலகட்சி முறைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பது எதிர்க்கட்சியே – பிரதமர் ஹரிணி

25 தொழில்நுட்ப மற்றும் தொழிற்பயிற்சிக் கல்லூரிகளை அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை உபகுழு கூட்டம்

July 10, 2026
ரணில் – சஜித் இணைவு வரவேற்கத்தக்கது – இராதாகிருஷ்ணன்

எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச நியமித்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறோம் | சுனில் ஹந்துனெத்தி 

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures