காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினரின் படகு மோதியதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த 42 வயது மீனவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்.போதனா மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.