காணாமல் போனோர் தொடர்பில் ஆராய்வதற்கான அலுவலகத்தை செயற்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதியினால் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக விசேட அலுவலகத்தை அமைக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.
இதுகுறித்து தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,
2016ஆம் ஆண்டு 14ஆம் இலக்ககாணாமல் போன ஆட் கள் பற்றிய அலுவலகம் ஸ்தாபித்தலும்,நிர்வகித்தலும் தொடர்பான சட்டமும் அது தொடர்பான 2017 ஆம் ஆண்டின் 9ஆம் இலக்கத்திருத்தச்சட்டமும் உள்ளடங்கலான காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் தேசியஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று 12ஆம் திகதி,செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைமுறைக்கு வரும்வகையில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் வர்த்தமானியில் இடம் பெறுவதற்காக கைச்சாத்திடப்பட்டது.
இதனடிப்படையில் காணாமல் போனோருக்கான அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டு அதனுடைய கடமைகள், அதிகாரங்கள், தொழிற்பாடுகள் நடைமுறைப்படுத்து வதற்கும் தொழிற்படுவதற்குமான ஏற்பாடுகள் உடனடியாக நடை முறைக்குவரும்.
இது நல்லாட்சி அரசின் கீழ் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற் கான ஒரு மைல்கல்லாக நோக்கப்ப டுகின்றது.
