சுரேஷ் காமாட்சி இயக்கி, தயாரித்திருக்கும், மிகமிக அவசரம் படத்தின் நாயகியாக, ஸ்ரீப்ரியங்கா நடித்துள்ளார். இவர், ஏற்கனவே, கங்காரு, வந்தா மல, கோடை மழை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இது குறித்து, ஸ்ரீப்ரியங்கா கூறுகையில், ”இப்படம், பெண்களுக்கான முக்கிய பிரச்னை ஒன்றை பற்றி சொல்கிறது. இதுவரை, நான் அரைகுறை ஆடையில் நடித்ததில்லை; இனியும் நடிக்க மாட்டேன். முகபாவத்திலேயே, கவர்ச்சியை வெளிப்படுத்த முடியும். அப்படி தான் நடிக்க விரும்புகிறேன். ஆடைக்குறைப்பில், எனக்கு உடன்பாடு இல்லை,” என்றார். இப்படம், அக்., 11ல் வெளியாகிறது.