- பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘இரவின் நிழல்’.
- இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.
இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘இரவின் நிழல்’. இதில் வரலக்ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘இரவின் நிழல்’ திரைப்படம் நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. அகிரா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இரவின் நிழல்
இப்படம் ஜூலை 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள “பெஜாரா” என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகியுள்ள இப்பாடல் காதல் தோல்வியால் இளைஞன் ஒருவன் தன் வலியை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த பாடல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
