பிரதான காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்து கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை பிறப்புரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கத் தேவையான சட்ட மூலம் தயார்படுத்தப்பட்டுள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு கருவுற்ற பெண், தனது பதற்றமான மனோநிலையில் பெற்றெடுக்கும் குழந்தை அங்கவீனமுற்றுப் பிறப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாக வைத்திய ஆய்வுகள் குறிப்பிட்டுள்ளன. இந்த நிலைமை கருத்தில் கொண்டே இந்த சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், அரச வைத்தியசாலைகளில் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவே இக்கருக்கலைப்பு இடம்பெறும் எனவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.
