கருக்கலைப்பை அரசாங்கம் சட்ட மாக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் சில வைத்தியர்களே தமது வருமானத்தை நோக்காகக் கொண்டு இவ்வாறான தீர்மானங்களை கொண்டுவர முயற்சிப்பதாகவும் அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்பை சட்ட ரீதியானதாக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக கார்டினல் மெல்கம் ரஞ்ஜித் அரசாங்கத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அமைச்சரிடம் வினவியதற்கே இவ்வாறு கூறியுள்ளார்.
தான் பிரதமரிடம் தொடர்புகொண்டு இது தொடர்பில் வினவியதாகவும், அவ்வாறான எந்தவொரு நடவடிக்கையையும் அரசாங்கம் முன்னெடுக்கவில்லையெ பிரதமர் தெரிவித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
