Thursday, September 4, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கனடா மாணவர் கடன் பெறுபவர்களிற்கு புதிய இடைவேளை.

November 2, 2016
in News
0
கனடா மாணவர் கடன் பெறுபவர்களிற்கு புதிய இடைவேளை.

Group of English or French students with the flag of Canada

கனடா மாணவர் கடன் பெறுபவர்களிற்கு புதிய இடைவேளை.

மத்திய அரசாங்கம் சமீபத்திய இரண்டாம்-நிலை பட்டதாரிகள் அவர்களது மாணவர் கடன்களை சமாளிப்பதற்கான புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
நவம்பர் 1-ந்திகதி தொடக்கம் வருடமொன்றிற்கு குறைந்தது 25,000டொலர்களை உழைக்கும் வரை கனடியர்கள் அவர்களது கனடா மாணவர் கடனை மீள செலுத்த தேவை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது வருமானம் மற்றும் குடும்ப அளவு போன்றனவற்றை அடிப்படையாக கொண்டு தங்கள் கடனை சமாளிக்க மாணவர்கள் உதவியை நாடலாம். கடன் பெறுபவர்கள் மாதாந்த கட்டண தொகையை குறைக்க அல்லது முற்றாக நீக்க விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவின் எதிர்கால வளம் வேலை சந்தையில் இளம் கனடியர்கள் சிறந்த கல்வி மற்றும் பயிற்சிகளை பெறுவதில் அமைந்துள்ளதென வேலை வாய்ப்பு அமைச்சர் மேரிஆன் மைகிசக் தெரிவித்துள்ளார்.
குறைந்த வருமான குடும்பங்களை சார்ந்த முழு நேர மாணவர்கள் வருடமொன்றிற்கு 2,000டொலர்கள் முதல் 3,000 டொலர்கள் வரை ஆதரவு தொகை பெறலாம். நடுத்தர-வருமானம் பெறும் குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் 800 டொலர்கள் முதல் 1,200டொலர்கள் வரையும் பகுதி-நேர குறைந்த வருமான குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் 1,200 டொலர்கள் முதல் 1,800டொலர்கள் வரை நிதி உதவி பெறலாம்.கனடா மாணவர் கிரான்ட் 50சதவிகிதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2013 தொடக்கம் 2014வரை கிட்டத்தட்ட 750,000மாணவர்கள் கனடா மாணவர் கடனை திரும்ப செலுத்துகின்றனர் என தெரிவிக்கப்பபட்டுள்ளது. இவர்களில் சுமார் 234,000 மாணவர்கள் கடனை திரும்ப செலுத்தும் உதவி திட்டத்தினால் நன்மையடைந்துள்ளனர்.
கடன் சுமையால் அவதிப்படும் மாணவர்கள் எத்தகைய நிதி உதவி தெரிவுகள் கிடைக்கும் என்பதை தேசிய மாணவர் கடன் சேவை மையத்துடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Tags: Featured
Previous Post

அமெரிக்காவில் இரட்டை துப்பாக்கிப் பிரயோகங்கள்: நால்வர் உயிரிழப்பு, 11 பேர் காயம்

Next Post

கனடாவிற்கு வர விரும்புபவர்களுக்கு பத்து வழிகள்!

Next Post
கனடாவிற்கு வர விரும்புபவர்களுக்கு பத்து வழிகள்!

கனடாவிற்கு வர விரும்புபவர்களுக்கு பத்து வழிகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures