கனடா இருப்பிடமற்றவர்களிடையே (homeless) ஏற்படும் மரணங்களை கணக்கிட உள்ள டொரொன்டோ மாநகர சபை
தற்போது மாநகரசபைக்குச் சொந்தமான புகலிடங்களில் தங்கியுள்ளவர்களிடையே ஏற்படும் மரணங்களையே டொரொன்டொ மாநகரசபை கணக்கெடுத்து வருகிறது. 2007 ஆம் ஆண்டிற்கும் 2016 ஆம் ஆண்டிற்கும் இடையேயான காலப்பகுதியில் மாநகரசபைக்குச் சொந்தமான புகலிடங்களில் 247 மரணங்கள் சம்பவித்துள்ளன.
இத்தரவானது, நகரில் இருப்பிடமற்றவர்களிடையே (homeless) ஏற்படும் மரணங்கள் தொடர்பான முழுமையான நிலைமையை வெளிப்படுத்துவதாக அமையாது என டொரொன்டோ மாநகர பொதுச் சுகாதாரப் பிரிவுப் பேச்சாளர் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் இருப்பிடமற்றவர்களிற்கான உதவிகளை வழங்கும் ஏறத்தாழ 200 சமூக மற்றும் சுகாதார சேவை அமைப்புகளிடம் இருந்து தரவுகள் பெறப்பட உள்ளன.
முதற்கட்டமாக வயது, பாலினம், இருப்பிடம் மரணத்திற்கான காரணம் போன்ற தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளன, பின்னர் மேலதிக தகவல்களும் உள்ளடக்கப்படும்.