கனடாவிற்கு பெற்றோர் மற்றும் பேரன், பேத்தி ஆகியோரை வரவழைப்பதில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் போதுமானவை அல்ல

கனடாவிற்கு பெற்றோர் மற்றும் பேரன், பேத்தி ஆகியோரை வரவழைப்பதில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் போதுமானவை அல்ல

பெற்றோர் மற்றும் பேரன், பேத்தி ஆகியோரை வரவழைப்பதில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் வரவேற்கத்தக்கவையே ஆயினும், போதுமானவை அல்ல எனக் கூறுகிறார் Ontario Council of Agencies Serving Immigrants (OCASI) என்ற அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் Debbie Douglas.

பழைய முறைப்படி வரிசைக்கிரம அடிப்படையில் (first-come-fisrt-serve) விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் முறை பல்வேறு கண்டனங்களுக்குள்ளாகியுள்ளது.

ஜனவரி 3, 2017 முதல், எழுமாற்றாக விண்ணப்பங்களைத் தெரிவு செய்யும் முறை குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.

குலுக்கல் முறை ( எழுமாற்றான தெரிவு) மூலம் விண்ணப்பங்களைத் தெரிவு செய்யும் இம்முறையிலும், அதிகுறைந்த வருமானம் ஒரு தகுதிகாண் காரணியாக உள்ளது.

இதன் காரணமாக குறைவான வருமானம் பெறும் குடும்பங்கள் தமது பெற்றோர், பேரன் / பேத்தி ஆகியோரை வரவாழைக்கத் தகுதி இல்லாதவர்கள் ஆகிறார்கள்.

இது திருப்திகரமான ஒரு நிலை அல்ல, அதிகுறைந்த வருமான எல்லைகளில், காத்திரமான மாற்றங்கள் செய்யப்படவேண்டும் எனக் கோருகிறார் Debbie Douglas.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News