சீஸ்கேக் ஆலையில் உணவருந்த வாயூறிக்கொண்டு காத்திருக்கும் ரொறொன்ரோவாசிகள் அதற்காக பவலோவிற்கு செல்லத்தேவையில்லை. யு.எஸ்.சார்ந்த இந்த ஆலைத்தொடரின் பரந்து பட்ட பட்டியலில் சீஸ் கேக் பிரபல்யமானவை. இந்த ஆலையின் முதலாவது நிலையம் எதிர்வரும் முன்பனிக்காலத்தில் யோர்க்டேல் சாப்பிங் மையத்தில் திறக்கப்படுகின்றது.
மையம் இத்தகவலை அதனது ருவிட்டரில் புதன்கிழமை வெளியிட்டுள்ளது.
முதலாவது சீஸ்கேக் ஆலை உணவகம் 1978ல் பெவர்லி ஹில் கலிபோர்னியாவில் திறக்கப்பட்டது. தொடரந்து 200-ற்கும் மேற்பட்ட இடங்களில் ஆரம்பிக்கப்பட்டது.
யோர்க்டேல் மாலில் ஆரம்பிக்கப்பட உள்ள உணவகம் கனடாவிற்கான முதலாவது முயற்சியாகும். ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைட் ,சவுதி அரேபியா, கட்டார், லெபனான், மெக்சிக்கோ மற்றும் சைனா ஆகிய இடங்களிலும் திறக்கப்பட்டுள்ளன.