குழந்தை வரம் வேண்டுபவர்கள், திருமணம் தடைப்படுபவர்கள் கந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கும் போது சொல்ல வேண்டிய திருப்புகழை பார்க்கலாம்.
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப… முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த … பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி… லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி… தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க… வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த… குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின்… முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த… பெருமாளே.
இந்த திருப்புகழ் பாடல் உண்டு. இந்த சுவாமி மலை பாராயணம் செய்யலாம்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]