கண்டி போதனா வைத்தியசாலையில் அவசர விபத்து பிரிவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிய அவசரப் பிரிவுடன் 190 பிரிவுகள் வைத்தியசாலையில் இயங்கவுள்ளதாக கண்டி போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
அவசர விபத்து பிரிவு இன்றி அவசர சிகிச்சைப் பிரிவு மட்டுமே வைத்தியசாலையில் இயங்குவதாகவும் அவர் கூறினார்.
எனினும், அவசர சிகிச்சைப்பிரிவில் போதிய இடவசதிகள் இல்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள அவசர விபத்து சிகிச்சைப்பிரிவில் 6 கட்டில்கள் அடங்கலாக அதி தீவிர சிகிச்சைப்பிரிவும் உள்ளடக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.