இலங்கையின் மத்திய மாகாணம் கண்டியில் இருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கண்டியின் பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கைக்கு நீராடச் சென்ற இருவரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த கங்கையில் நீராடச் சென்றபோது இவர்களை ஆற்று நீரோட்டம் அடித்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருவரின் உடலங்களும் மீட்கப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை காணாமல் போயுள்ள இருவரையும் தேடும் நடவடிக்கையில் காவற்துறை மற்றும் பிரதேச மக்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவருகிறது .