Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கணவனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மனைவி பலி

February 16, 2022
in News, Sri Lanka News
0
சமுர்தி வீதியில் துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி

களுத்துறை – மத்துகம பொலிஸ் பிரிவில் பாலிகாவீதி , மத்துகம பிரதேசத்தில் பெண்ணொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

38 வயதுடைய மத்துகம பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும் , கொலைக்கான காரணம் தெரியவரவில்லை என்றும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எனினும் துப்பாக்கிச் சூட்டினை நடத்துவதற்கு மூன்று நபர்கள் வருகை தந்துள்ளமை தெரியவந்துள்ளது.

களுத்துறை குற்ற ஸ்தள பரிசோதனைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட ஸ்தள சோதனைகளில் சம்பவம் இடம்பெற்ற இடத்திலிருந்து ரி – 56 ரக 6 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மத்துகம நீதவானினால் ஆரம்ப நீதவான் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் , பிரேத பரிசோதனைக்காக உயிரிழந்த பெண்ணின் சடலம் களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் கணவனைக் கொல்வதற்காகவே சந்தேகநபர்கள் வருகை தந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட போது கணவன் வீட்டில் இருந்த நிலையிலும் , குறித்த நபர் அதிலிருந்து தப்பியுள்ளார்.

கொலைக்கான காரணம் , கொலை செய்ய சந்தேகநபர்கள் மற்றும் அவர்களால் உபயோகிக்கப்பட்ட துப்பாக்கி என்பவை தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.


#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

பிக்கு ஒருவருக்காக பரீட்சை எழுதிய மற்றொரு பிக்கு கைது

Next Post

மரணங்களின் போது பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை | வெளியானது புதிய சுற்றுநிரூபம்

Next Post
2850 கொரோனா சடலங்கள் இதுவரை ஓட்டுமாவடியில் அடக்கம்

மரணங்களின் போது பி.சி.ஆர். பரிசோதனை அவசியமில்லை | வெளியானது புதிய சுற்றுநிரூபம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures