ஒலிம்பிக் வரலாற்றில் கனடிய கொடி-ஏந்தும் மிக இளவயது பென்னி ஒலிக்சியாக்!

ஒலிம்பிக் வரலாற்றில் கனடிய கொடி-ஏந்தும் மிக இளவயது பென்னி ஒலிக்சியாக்!

கனடிய ஒலிம்பிக் கமிட்டி றியோ ஒலிம்பிக்கின் நிறைவு விழாவில் கனடிய கொடியை தாங்கி செல்ல 16-வயதுடைய பென்னி ஒலிக்சியாக்கை தெரிவு செய்துள்ளது.
கனடிய கொடியை தாங்கி செல்வதில் தான் அதீத மகிமை அடைவதாக இவர் தெரிவித்தார். இந்த கௌரவத்துடன் ஒலிம்பிக் வரலாற்றில் கனடாவின் மிக இளவயது கொடி-ஏந்துபவர் என்ற பெயரையும்  பெறுகின்றார்.
பிரேசிலில் நடந்த கோடை ஒலிம்பிக்கில் ரொறொன்ரோவை சேர்ந்த 16-வயதுடைய நீச்சலாளரான இப்பெண் நீச்சல்தடாகத்தில் நான்கு பதக்கங்கள்-தங்கப்பதக்கம் உட்பட சில்வர் மற்றம் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
தனது கனவு உண்மையாகியது போன்று தான் உணர்வதாக தெரிவித்த இவர் ஒலிம்பிக் நிறைவு விழாவில் கனடிய கொடி-ஏந்தும் பொறுப்பை தந்தமை தன்னை கௌரவ படுத்தியுள்ள தெனவும் இத்தருணத்தை தான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை எனவும் 16வயதுடை பென்னி ஒலிக்சியாக் கூறினார்.
கனடியராக இருப்பதில் இதுவரை இவ்வளவு பெருமையடைய வில்லை எனவும் தெரிவித்தார்.

pen1pen2pen3pen5pen6

 

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News