Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரு குழந்தையின் தாயான அக்கரைப்பற்று பெண்ணை திருமணம் செய்துகொள்ள  இலங்கைக்கு வந்த இந்தியப் பெண் விடுதலை

June 28, 2022
in News, Sri Lanka News
0
சிறையில் இருக்கும் புலி சந்தேகநபர் சாதாரண தர பரீட்சையில் சித்தி!

ஒரு குழந்தையின் தாயான பெண் ஒருவரை திருமணம் செய்ய இலங்கைக்கு வருகை தந்த தமிழகப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரை குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No description available.

இன்று (27) மீண்டும் குறித்த வழக்கு நீதிவானின் சமாதான அறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட  நிலையில் இரு பெண்களின் உளநல மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முதலாவது சந்தேக நபரான 19 வயது மதிக்கத்தக்க  ஒன்றரை வயதான  குழந்தையின் தாயாரை ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவித்து பெண்கள் காப்பகமொன்றில் அவரது குழந்தையின் எதிர்கால நலன் மற்றும் குறித்த பெண்ணின் நடத்தைகள் தொடர்பில் அறிக்கை கிடைக்கும் வரை ஒப்படைக்குமாறும் எதிர்வரும் ஜூலை மாதம் 29 ஆந்திகதி வரை குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அத்துடன் இரண்டாவது சந்தேக நபரான 24 வயது மதிக்கத்தக்க தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான  பெண் தொடர்பில் குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படாமையினால்  அவர் தொடர்பில் முன்னிலையான  சட்டத்தரணி, இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தில் ஒப்படைத்து சொந்த இடத்துக்கு மீள அனுப்புவதற்கு விடுத்த விண்ணப்பத்தை பரீசீலனை செய்த நீதிவான் இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியை விடுவித்து அனுமதி வழங்கினார்.

மேலும் எவ்வித குற்றச்சாட்டுகள் இன்றி விடுவிக்கப்பட்ட இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியை அழைத்து செல்ல மட்டக்களப்பில் இருந்து வேன் ஒன்றில் பெண்கள் உரிமை தொடர்பான அமைப்பு ஒன்று பெண் சட்டத்தரணியுடன் வருகை தந்து அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள், இவ்வழக்கில் பிரசன்னமாகி முதலாவது சந்தேக நபரான 19 வயது மதிக்கத்தக்க பெண்ணின் ஒன்றரை  வயது குழந்தையின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். இவ்விடயத்தையும் மன்று கவனத்தில் எடுத்து தாய் மற்றும் குழந்தையை பெண்கள் காப்பகத்தில் வைத்து பராமரிக்குமாறு கட்டளையிட்டது.

இந்த வழக்கில் முதலாவது சந்தேக நபரான 19 வயது மதிக்கத்தக்க பெண்ணின் முறைப்பாட்டாளர்களான பெற்றோர், கணவன் சார்பாக சட்டத்தரணிகளான ஏ.எம் ஜெனீர் மற்றும் எம்.ஐ றிஸ்வான் ஆகியோர் ஆஜராகினர்.

இரண்டாவது சந்தேக நபரான தமிழ்நாட்டின் குன்னத்தூரைச் சேர்ந்த பட்டதாரியான  பெண்ணுக்கு மட்டக்களப்பில் இருந்து பெண்கள் உரிமைக்கான அமைப்பொன்றின் அனுசரணையில் பெண் சட்டத்தரணி ஒருவர் ஆஜராகி இருந்தார்.

கடந்த புதன்கிழமை (22) அன்று இவ்விடயம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் அக்கரைப்பற்று நீதிமன்றத்தினால் இரு பெண்களையும் இவ்வாறு உலநல மருத்துவரிடம் காண்பித்து அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தார்.

இரு பெண்களையும் கல்முனை ஆதார வைத்தியசாலை மனநலப் பிரிவில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர் மேற்படி பெண்கள் இருவரும் நீதிமன்றக் கட்டளையின்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இதற்கமைய இன்று(27) மீண்டும் குறித்த வழக்கு நீதிவானின் சமாதான அறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இரு பெண்களின் உளநல மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து அக்கரைப்பற்று நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முதலாவது சந்தேக நபரான 19 வயது மதிக்கத்தக்க ஒன்றரை வயது குழந்தையின் தாயாரை ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையில் விடுவித்து பெண்கள் காப்பகமொன்றில் அவரது குழந்தையின் எதிர்கால நலன் மற்றும் குறித்த பெண்ணின் நடத்தை கோலங்கள் தொடர்பில் அறிக்கை கிடைக்கும் வரை ஒப்படைக்குமாறும் எதிர்வரும் ஜுலை மாதம் 29 ஆந்திகதி வரை குறித்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த திங்கட்கிழமை (20) இந்தியாவிலிருந்து இலங்கை வந்து அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனது  நண்பியைத் தேடி தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் வந்துள்துள்ளதுடன் இருவரும் நண்பிகளாக தொலைபேசி மூலம் உரையாடி வந்ததாகவும் தற்போது திருமணம் செய்வதற்கு விருப்பம் தெரிவித்ததை தொடர்ந்து அக்கரைப்பற்று பெண்ணின் பெற்றோர் அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர் .

மேற்படி பெண்கள் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் திருமணம் செய்துள்ள நண்பி ஒருவர் மூலம் தொலைபேசியூடாக தொடர்பினை பேணியுள்ளதுடன் பெண்ணுக்கு திருமணமாகி ஒன்றரை வயது மகளும் கணவரும்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ராஜபக்ச குடும்பம் சொத்துகளை மறைத்து வைத்துள்ள நாடுகள் குறித்து தகவல்

Next Post

காலை நேர மின்துண்டிப்பு இணையவழி கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Next Post
நாளைய மின்வெட்டு தொடர்பான விபரம் வெளியானது

காலை நேர மின்துண்டிப்பு இணையவழி கல்வி நடவடிக்கைகளை பாதிக்கும் - பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures