ஐக்கிய தேசியக் கட்சிக்கான புதிய பொறுப்பாளர்கள் எதிர்வரும் மே 01 ஆம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்படவுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளரும் உப செயலாளருமான அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று (08) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைக் குறிப்பிட்டார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே கட்சியின் தலைவராக இருப்பதற்கு கட்சியிலுள்ள பெரும்பாலானவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.