ஐஸ்வர்யா ராய், மாமியாரின் தோளில் சாய்ந்து கண்ணீர் சிந்தியது ஏன்? புகைப்படம் உள்ளே
ஸ்டார்டஸ்ட் விருது வழங்கும் விழா அண்மையில் நடந்தது. அந்த விழாவில் பாலிவுட் பிரபலங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பச்சன்கள், கான்கள், கபூர்களும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
ஐஸ்வர்யா ராய் விருது விழாவின்போது தனது மாமியாரும், நடிகையுமான ஜெயா பச்சனின் தோளில் சாய்ந்து பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.
விருது விழாவை ஐஸ்வர்யாவின் கணவரும், நடிகருமான அபிஷேக் பச்சன் தொகுத்து வழங்கியுள்ளார். ஆனால் ஐஸ்வர்யாவுக்கான விருதை அவர் அறிவிக்கவில்லையாம். அந்த ஃபீலிங்கில் தான் ஐஸ் மாமியார் தோளில் சாய்ந்துள்ளார்.
விருதை ஐஸ்வர்யாவுக்கு அவரது மாமனார் அமிதாப் பச்சன் அளித்தார். உடனே அவர் அமிதாபின் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெற்றார். ஐஸின் இந்த செயல் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது.