2021 ஐ.சி.சி. ஆண்களுக்கான டி-20 உலகக் கிண்ணத்தில் அங்கீகரிக்கப்பட்ட தங்கள் அணி வீரரை மாற்றுவதற்கு மேற்கிந்தியத் தீவுகள் அணி முறையான கோரிக்கை வைத்துள்ளனர்.
கிறிஸ் டெட்லி, கிளைவ் ஹிட்ச்காக், ராகுல் டிராவிட், தீரஜ் மல்ஹோத்ரா, சைமன் டவுல் மற்றும் இயன் பிஷப் ஆகியோரைக் கொண்ட ஐ.சி.சி.தொழில்நுட்பக் குழு இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்தது.
அதன்படி ஒக்டோபர் 27 புதன் அன்று அணியில் இடம்பெறும் மாற்றம் 15 பேர் கொண்ட மேற்கிந்தியத்தீவுகளுக்கு நடப்பு டி-20 உலகக் கிண்ணத்தில் சகலதுறை ஆட்டக்காரர் ஜேசன் ஹோல்டரை உள் நுழைய அனுமதிக்கும்.
மேற்கிந்தியத் தீவுகள் குழு 1 இல் உள்ள இரண்டு தொடக்கப் போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது, அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமாயின் அவர்கள் ஏனைய போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.
24 வயதான மெக்காய் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது காயமடைந்துள்ளார். அதனால் அவரால் சூப்பர் 12 சுற்றின் ஏனைய போட்டிகளில் கலந்து கொள்ள முடியாத நிலையிலேயே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந் நிலையில் அவருக்கு பதிலாக அணிக்கு வரவழைக்கப்பட்டுள்ள 29 வயதான ஹோல்டர் வெள்ளிக்கிழமை பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]