ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி திஸாநாயக்க மற்றும் டிலான் பெரேரா ஆகியோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு கட்சி தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடகப் பேச்சாளர் வீரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் கட்சியின் தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் சென்ற இவர்கள், அக்கட்சியிலிருந்து விலகி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தை இன்று பெற்றுக் கொண்டனர். இதனையடுத்தே அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப் போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.
இதேவேளை, நேற்றைய தினம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையைப் பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்களுக்கு எதிராகவும் ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.