ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அவரை கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்தால் அவருக்கான ஆதரவை வழங்கவுள்ளதாகவும் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
ஒவ்வொருவரும் தாம் வேட்பாளர் எனக் கூறிக்கொண்டதற்காக வேட்பாளராக முடியாது. கட்சியின் அரசியலமைப்புக்கு ஏற்ப, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிப்பதில் பிரச்சினையில்லை.
சஜித் பிரேமதாசவின் மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகள் உள்ளன. அதில் இரண்டு தொகுதிகளுக்கு நாமே சென்று பிரச்சாரம் செய்தோம். மாவட்டத்தின் வெற்றிக்காக ஓட முடியாத ஒருவர் எவ்வாறு நாட்டை வெற்றியடைச் செய்வார் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
வாயால் எதனையும் கூறமுடியும். ஆனால், செயலில் காட்டுவதுதான் கடினம். அவ்வாறு காட்டிய ஒருவருக்கு கொடுப்பதுதான் பொருத்தமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை அமைச்சர் சஜித்துக்கு கொடுத்து கட்சியை வெற்றியடையச் செய்து காட்டுமாறு கூறினால் நல்லதில்லையா? என ஊடகவியலாளர் ஒருவர் பொன்சேகாவிடம் வினவியதற்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.